திருவிழாவில் கோர விபத்து - 50 பேர் பலி - 200 மேற்பட்டோர் படுகாயம்

இந்தியாவில் இன்று (19) தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது. 

அப்போது எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவில் கோர விபத்து - 50 பேர் பலி - 200 மேற்பட்டோர் படுகாயம் திருவிழாவில் கோர விபத்து - 50 பேர் பலி - 200 மேற்பட்டோர் படுகாயம் Reviewed by Vanni Express News on 10/19/2018 11:46:00 PM Rating: 5