முச்சக்கரவண்டி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - மூவர் காயம்

-க.கிஷாந்தன்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்பட்டுள்ளனர்.

நாகசேனை நகரத்திலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று இரவு தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை நகர பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
முச்சக்கரவண்டி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - மூவர் காயம் முச்சக்கரவண்டி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - மூவர் காயம் Reviewed by Vanni Express News on 10/22/2018 11:15:00 PM Rating: 5