தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து - இராணுவ வீரர் பலி

நிட்டம்புவ, கலல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பசியாலை, போலகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து - இராணுவ வீரர் பலி தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து - இராணுவ வீரர் பலி Reviewed by Vanni Express News on 10/03/2018 04:41:00 PM Rating: 5