கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்து ஒருவர் பலி

பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனரையும் சிறிய குழந்தை ஒன்றையும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

பொல்கஸ்ஓவிட்ட பகுதியை ​சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்து ஒருவர் பலி கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்து ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 10/04/2018 05:09:00 PM Rating: 5