தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து - இருவர் பலி

அவிசாவளை கொழும்பு பிரதான வீதியின் ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து - இருவர் பலி தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து - இருவர் பலி Reviewed by Vanni Express News on 10/05/2018 04:39:00 PM Rating: 5