வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் விபத்து - இருவர் வைத்தியசாலையில்

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் கனரக வாகனமும் உந்துருளி ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞரும், 18 வயதுடைய அவரின் மனைவியுமே காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் விபத்து - இருவர் வைத்தியசாலையில் வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் விபத்து - இருவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 10/09/2018 04:23:00 PM Rating: 5