சாதாரண தரப் பரீட்சையின் 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவின் 134 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஹேவாஹெட்ட தலாத்துஓயா மகாவித்தியாலயத்தை இலங்கையின் முதலாவது பசுமை கல்லூரியாக மாற்றியமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சையின் 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை சாதாரண தரப் பரீட்சையின் 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை Reviewed by Vanni Express News on 10/15/2018 04:18:00 PM Rating: 5