கொழும்பு, கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐந்து பேர் கைது

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொழும்பு, கிரேன்பாஸ் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கிரேன்பாஸ், மகவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 650 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு, கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐந்து பேர் கைது கொழும்பு, கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐந்து பேர் கைது Reviewed by Vanni Express News on 10/06/2018 12:12:00 PM Rating: 5