குடும்ப தகராறு மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது

வென்னப்புவ, கடவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தந்தை, மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். 

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் தந்தைய மகன் தாக்கியுள்ளதாகவும், இதனால் தந்தை கத்தியால் மகனை குத்தியுள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது. 

படுகாயமடைந்த மகன் மாரவிரல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. 

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடும்ப தகராறு மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது குடும்ப தகராறு மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது Reviewed by Vanni Express News on 10/13/2018 03:00:00 PM Rating: 5