உரிமை போராட்டம் எமது பிறவிக்குணம் - இது முடிவல்ல ஆரம்பம்

-ACM.Faisal

இஸ்லாமிய சாம்ராச்சிய வரலாற்றில் பல வீரத் தாய்மார்களை சுமந்து வந்த வீரம் மிக்க தாய்மார்களை புத்தளத்து மண்ணும் கொண்டுள்ளது என்ற வரலாற்று உண்மையை உலகிற்கு அழுத்திச் சொன்னது நேற்றைய வீரமிக்க விஷ்பரூப மக்ககள் பேரணி. (அல்ஹம்துலில்லாஹ்)  

அன்னை ஆயிசா பாத்திமா சுமையா மர்யம் ஹப்சா போன்ற கண்ணிய மிக்கவர்களின் வாரிசுகள் நாம் என்பதை பறைசாற்றிய பாசமும் வீரமும் மிக்க எமது சகோதர தாய்மார்களுக்கு இறைவன் மேலும் பரகத் செய்வானாக 

சண்டித்தனமாக புத்தளத்தில் குப்பை கொட்டும் அரசின் நரித்திட்டத்திற்கு சாவுமணி அடிக்கும் சரித்திரம் மிக்க போராட்டம் உங்கள் போராட்டம் 

வீரத்தாலாட்டு படித்து இஸ்லாத்தை வாழ வைத்த பரம்பரை வழிவந்தவர்கள் நீங்கள்

தொட்டிலை தாலாட்டவும் தெரியும். எமக்கு உரிமைக்கு உலைவைத்தால் களத்தில் இறங்கி கறுவறுக்கவும் தெரியும் என்பதை ஆணித்தரமாக அரசுக்கு சொல்லியுள்ளீர்கள்

நேற்றைய உங்கள் போராட்டம் காசா மண்ணின் #பெண்களின் வீரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதவர்கள் நாங்கள் என்பதை குறுட்டு நியாயவாதிகளுக்கு கம்பீரமாய் சொல்லப்பட்டுள்ளது.

வெறித்தனமாக குப்பை கொட்டும் அரசின் வேடத் திட்டத்தை விரன்டோட வைத்தது உங்களின் போராட்டம்.

அரசே ஆக்ரோசம் கொண்ட எமது அகிம்சை போராட்டத்தை அலட்சியப்படுத்தி எமக்கு ஆப்படிக்க நினைத்தால் மீண்டும் வெடிக்கும் அகிம்சையின் இரண்டாம் கட்டம்.

இது முடிவல்ல ஆரம்பம் குப்பை திட்டம் கைவிடப்படும் வரை புத்தளத்து நேசன் ACM.Faisal
உரிமை போராட்டம் எமது பிறவிக்குணம் - இது முடிவல்ல ஆரம்பம் உரிமை போராட்டம் எமது பிறவிக்குணம் - இது முடிவல்ல ஆரம்பம் Reviewed by Vanni Express News on 10/13/2018 02:28:00 PM Rating: 5