வாக்குக்காக மக்களை தேடுபவர்கள், ஏன் மக்களின் பிரச்சினைகளை தேடித் தீர்ப்பதில்லை

-முஹம்மட் மனாசிர் சம்மாந்துறை

தனது சொந்த அதிகார தேவைக்காக மக்களைத் தேடிச்சென்று, அவர்களுடன் கலசமாற உரையாடி குடும்பத்தில் ஒருவனாக தேர்தல் காலங்களில் மாத்திரம் உறவாடி, எம் அரசியல் அதிகாரத்தை பெறும் தலைமைகளுக்கு, தனக்கு வாக்களித்த மக்களுக்கு பிரச்சினை என்று வரும் போது மாத்திரம் ஏனோ அம்மக்கள் தங்களை தேடி வரவேண்டும் எனவும், அவ்வாறு சென்றாலும் செய்து முடிக்க வக்கற்ற நிலையிலே தான், நம் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றனர்.

சம்மாந்துறை முஸ்லிம்களுக்கு சொந்தமான கரங்கா வட்டை காணியில் அம்பாறையை சேர்ந்த பேரினவாத சகோதரர்களால் 58 ஏக்கர் காணி நிலத்தை நெற் செய்கை செய்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது தொடர்பான செய்திகளை பார்க்ககூடியதாக இருந்தது.

இப்பிரச்சினை தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், இப் பிரச்சினை தொடர்பில் தன்னை எவரும் வந்து சந்திக்கவில்லை எனவும், இது தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு குறிப்பிடுவது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இது ஒரு குறித்த நபருடைய பிரச்சினையாக இருந்தால் இவ்வாறு தனக்கு தெரியவில்லை எனவும், யாரும் பேசவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்கலாம். அவ்வாறு அல்லாமல் ஒரு சமூகத்தினுடைய பிரச்சினையை தனக்கு தெரியாது என்பதும், யாரும் கூறவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி நீங்கள். மக்களுடைய தேவைகளை,அவர்களுக்கான சேவைகளை செய்வதற்கே உங்களை தெரிவு செய்கின்றனர். அவ்வாறு இருக்க கூடிய நீங்கள் எம் சமூகத்தினுடைய நில அபகரிப்புக்கு எதிராக முந்திக் கொண்டு தாங்களால் முடிந்தளவு போராட வேண்டிய கடப்பாடு கொண்டவராவர். அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியதை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அறிந்து அம்பாறை
மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.ஐ.பண்டாரநாயக்கவையும், பிரதேச செயலாளரையும் தொடர்பு கொண்டு " முஸ்லீம்களுக்கு சொந்தமான காணி நிலங்களில் பெரும்பாண்மை இன சகோதரர்களால் நெல் பயிரிடுவதற்காக உழவும் முடித்திருக்கின்றார்கள், 
அக் காணி தொடர்பில் உரிமங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அக் காணிக்கு உரிய முஸ்லீம்களுக்கு வேலாண்மை செய்வதற்கு அனுமதியையும் பெற்றுக் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2018.10.15ம் திகதி திங்கட்கிழமை ஒன்று கூடிய பாதிக்கப்பட்ட விவசாய உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உட்பட பல அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டு "நற்செய்தி" என்ற பெயரில் இது தொடர்பாக கூறியிருந்தார்கள். அச் செய்தியினை வெளிப்படுத்திய நபரிடம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் 2018.10.16ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த விவசாயிகளுடன் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல், தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அனைவரையும் கலந்து கொள்ள அழைத்ததோடு பிரதேச செயலாளர் மூலமாகவும் அழைப்பினை விடுவித்திருந்தார்.

அக் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் உரையாடுவதற்கு சற்று முன்னரே பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு பேசிய போதிலும், இது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே இக்காணி பிரச்சினை சாதகமான நிலையை அடைந்திருப்பதால் அதனை பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு சாதகமாக்க முனைகிறார் என அந்த அழைப்பை நிராகரிப்பதென முடிவு செய்து அக் கலந்துரையாடலுக்கு செல்லாமல் புறக்கணித்திருந்தனர்.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது, இக் கரங்கா காணி தொடர்பில் காணி உரிமையாளர்கள் பல தடவை பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விரக்தி தன்மையிலே இக் கலந்துரையாடலை புறக்கணித்து இருந்தனர்.

எனவே தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்த்துக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றீர்கள், அவற்றை புறக்கணிக்க நினைத்தால் மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள் இதுவே நிதர்சனமான உண்மையாகும்
வாக்குக்காக மக்களை தேடுபவர்கள், ஏன் மக்களின் பிரச்சினைகளை தேடித் தீர்ப்பதில்லை வாக்குக்காக மக்களை தேடுபவர்கள், ஏன் மக்களின் பிரச்சினைகளை தேடித் தீர்ப்பதில்லை Reviewed by Vanni Express News on 10/20/2018 05:49:00 PM Rating: 5