அதாவுல்லா சாய்ந்தமருதுக்கு செய்த சேவையை குறைத்து மதிப்பிட முடியாது..!

-எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை

சாய்ந்தமருதுக்கு முன்னால் அமைச்சர் அதாவுல்லா என்னசெய்தார் என்று கேட்பதற்கு முன்,  சாய்ந்தமருது மக்களின் 90% வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் செய்த சேவைகளைப் பட்டியலிட்டு கூறமுடியுமா? 

சாய்ந்த மருதில் இருந்த வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகத்தை மட்டுமல்ல இன்னும் சில நிறுவனங்கள் அம்பாரை நோக்கி சென்று விட்டது இதனைக் காப்பாற்ற முடியாத இந்தக்கட்சிக்கு, இதனைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது. 

சாய்ந்தமருதில் இருந்த பழமைவாய்ந்த ஆஸ்பத்திரி சுனாமியால் பாதிக்கப்பட்டபோது அதனை புதிதாக பிரதான வீதியிலுள்ள தாமரைக்குளத்து வளவில் அமைக்க முற்பட்டபோது, அது சேறு நிறைந்த பூமி அதில் கட்டிடம் அமைக்கமுடியாது என்று உங்கள் கட்சி அதனைத்  தட்டிக்கழித்தபோது அந்த ஆஸ்பத்திரியை அந்த இடத்தில்  கட்டித்தந்தது யார்? 

சாய்ந்தமருதிலே தலைநிமிர்ந்து நிற்கும் பிரதேசசெயலக கட்டிடத்தை கட்டித்தந்தது யார்? 

சாய்ந்தமருதில் உள்ள பெரும்பாண்மையான வீதிகளை போட்டுத்தந்தது யார்? 

நீர் வழங்கள் திணைக்களத்தின்  பிராந்திய சபை கட்டிடத்தை கட்டியதுமல்லாமல், அதற்கான நிலத்தையும் பெற்றுத்தந்தது யார்?

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிக்கு பின்னாலுல்ல பெரிய பாலத்தை நிர்மாணித்து தந்தது யார்?

இதற்கெல்லாம் ஒரே பதில் முன்னால் அமைச்சர் அதாவுல்லா என்றல்லவா கூறவேண்டும்.

அதே நேரம்  மு.காங்கிரஸ் செய்த சேவைகள் என்ன வென்று கூறமுடியுமா?  வோட்யாட் கட்டித்தறுகிறோம் என்று வைத்த நினைவுக் கல் இன்றும் அழுதுகொண்டிருக்கிறது. 

சாய்ந்தமருது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தோணாவை வைத்து இன்றும் வியாபாரம் செய்யும் இந்தக் கட்சி எப்படி சாய்ந்தமருதைப்பற்றி பேசமுடியும்.

சாய்ந்தமருது மக்கள் அபிவிருத்தியில் பின்தள்ளப்படுகின்றார்கள் என்ற காரணத்தினால்தான் எங்களைப் பிரித்து விடுங்கள் என்று கேட்கின்றார்கள். 18வருடங்களாக அந்த மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் இந்தக் கட்சி அந்த ஊருக்கு செய்த சேவைகளைப் பட்டியலிட முடியுமா?

சாய்ந்தமருதில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவைக் கூட ஒழுங்காக செய்து முடித்துக் கொடுக்க முடியாத இந்தக் கட்சிக்கு வக்காலத்து வாங்குவதைவிட நாக்கை பிடிங்கி சாகலாம் அல்லவா?

சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து பெற்ற மாநகர முதல்வர் பதவியைக்கூட  அரசியலுக்காக பறித்தெடுத்து சாதித்தது என்ன? அதன் மூலம் உங்கள் அரசியல் பசியை தீர்த்துக்கொண்டீர்கள் ஆனால் இந்தக்கட்சிக்கு 90வீதம் வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டீர்களா? 
அதன் பின் வந்த சட்டம் தெரிந்த  முதல்வர் எதனைச் சாதித்தார் என்று கூறமுடியுமா?

கல்முனை மாநகர முதல்வர்களாக மற்றவர்கள் இருந்தபோது சாய்ந்தமருது மக்கள் அதனைப் பறித்து தாருங்கள் என்று கேட்டார்களா? அல்லது சாய்ந்தமருதூரைச் சேர்ந்த ஒருவர்  முதல்வராக இருந்தபோது கல்முனை மக்கள்தான்  அதனை பறித்து தாருங்கள் என்று கேட்டார்களா?  இந்த மு.காங்கிரசி தானே இந்தப்பிரச்சினையை உண்டாக்கி இரு ஊர்களுக்குமிடையில் கசப்புணர்வை உண்டுபண்ணியது என்பது கூடவா இவர்களுக்கு தெரியாமல் போனது.

இந்த நிலையில்  அந்த மக்கள் நகரசபை கேட்டு போராடியபோது அந்த மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமலும், இந்த மக்கள்தான் கடந்த காலங்களில் இந்தக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் என்ற அனுதாபம்கூட இல்லாமல்,  அந்த போராட்டத்தில் பங்குபற்றிய சில இளைஞர்களை பொலிசாரை வைத்து அடித்து கைது செய்து சிறையிலே அடைத்ததை அந்த மக்கள் மறப்பார்களா?

அதாவுல்லா சாய்ந்தமருதுக்கு செய்த சேவையை சாய்ந்தமருது மக்கள் நன்றியுடன் நினைவு கூறாமல் இருக்கமுடியாது. அதனை விட்டுவிட்டு ஏதோ காரணத்தைக்காட்டி அவர் பிரதேசவாதி என்றுகூறி குழப்பத்தை உண்டுபண்ண நினைப்பவர்களின் நினைப்பு  தவறானது என்பதை சாய்ந்தமருது மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.  பிரதேசவாதம் என்பது எல்லா அரசியல்வாதிகளிடமும் இருக்கும் ஒருவியாதிதான்,  இந்த வியாதி மு.காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களிடமும்  இல்லையென்று சத்தியம் செய்து உங்களால் கூறமுடியுமா? பிரதேச வாதத்தை மூலதனமாக வைத்துத்தானே இன்றும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது.

இவ்வளவு விடயங்களுக்கும் காரணம் இந்த மு.காங்கிரஸிதான் என்பதை சாய்ந்தமருது மக்கள் புரிந்து கொண்டார்கள், மற்ற ஊர் மக்களும் புரிந்து வருகின்றார்கள் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் அதற்கான தீர்ப்பும் எழுதப்படும் என்பதையும் மறந்து விடாதீர்கள். 

ஆகவே முதலில் சாய்ந்தமருதுக்கு மட்டுமல்ல கல்முனைமாநகரத்துக்கான அபிவிருத்திகளைச்  செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதனை செய்ய முடியாத நீங்கள் இந்த ஜுஜுபி கேஸிகளையெல்லாம் சாய்ந்தமருது மக்களிடம் திணித்து இழந்த மதிப்பை திரும்பவும் பெற்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள் என்பதே எங்களின் கருத்தாகும்.
அதாவுல்லா சாய்ந்தமருதுக்கு செய்த சேவையை குறைத்து மதிப்பிட முடியாது..! அதாவுல்லா சாய்ந்தமருதுக்கு செய்த சேவையை குறைத்து மதிப்பிட முடியாது..! Reviewed by Vanni Express News on 10/07/2018 01:36:00 AM Rating: 5