றிஷாட் பதியுதீனை கொலை செய்வதின் மர்மம் - பரபரப்பு தகவல்கள் வெளியானது

-ACM. FAISAL

கொள்கையிலும், கட்சியிலும், கோட்பாடுகளிலும் வேறுபட்டாலும்  அமைச்சர் ACMC கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களை எப்படியாவது வெட்டி வீழ்த்தி ஓரம் கட்டி கொலை செய்யும் வேலைத்திட்டத்தில் மாத்திரம் ஒரே சிந்தனையில் நேர்கோட்டில் இணைந்து பயணிக்கின்றனர் பல்வேறு கூட்டு எதிரிகளின் முன்னணி

அத்தனை தரப்பிற்கும் தங்களது #சுயநலமிக்க நிகழ்ச்சி நிரலை செய்வதற்கு தலைவலியாக இருப்பவர்தான் இந்த றிஷாட் பதியுதீன்.

இதனால்தான் இவர்கள் இவரை ஓரம்கட்டி கொலை செய்யவும் முனைகின்றனர் 

றிஷாட் பதியுதீனை வீழ்த்த திரைக்குப் பின்னாலான காரணங்களை தனித்தனியே உற்று நோக்கும் போது

01. TNA யும் அவர்களுடன் இணைந்தவர்களும் :-

a. வடகிழக்கு இணைப்புக்கு றிஷாட் பதியுதீனின் விடாப்பிடியான எதிர்ப்பு

 b.டயஸ்போராக்களின் பல்வேறு வேலைகளை நெறிப்படுத்த முட்டுக்கட்டையாக இருத்தல்.

c. பலவந்த வடபுல முஸ்லீம்களின் வெளியேற்றத்தின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாது மாற்றான் மனப்பாங்குடன் நடாத்துவதை றிஷாட்  வன்மையாக கண்டித்து இந்த மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்கின்றமை.

d. வடகிழக்கு தமிழ் மக்களின் மத்தியிலும் றிஷாட்டின் செல்வாக்கு உயர்கின்றமை.

e. சுபீகரிக்கபட்ட முஸ்லிம்களின் உடமைகளை பெற்றுக் கொடுக்க துணிவுடன் முன்னிற்றல்.

f. TNA கோட்டையாக இருந்த பல பகுதிகளும் மக்களும் றிஷாட் பதியுதீனின் தலைமையின் பின்னால் இணைகின்றமை. (மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு)

02. துணை போகும் SLMC தலைமையும் ரவூப் ஹக்கீம் வாதிகளும் :-

A. மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் ஆலமரமாய் வளர்ந்த கட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவத்தின் பின்னர் அவர்

மக்களின் நலனில் அக்கறையற்று சுயநலத்தோடு சமூத்தை அடகுவைக்கும் போக்கில் விரக்த்தியுற்ற கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், கட்சியின் ஆரம்பகால போராளிகளும் கட்சியையும், தலைமைத்துவத்தையும் விட்டு வெளியேறியமை,

 B. மக்களுக்கான சேவையாலும் ,சமூக சிந்தனையாலும் மக்களின் செல்வாக்கை மிகக்குறுகிய காலத்தில் பெற்று மக்களின் மத்தியில் பேசப்படும் ஒரு தலைவராக றிஷாட் வலம்வருகின்றமை

C. ஹக்கீம் அவர்கள் சமூக விடயங்களில் மௌனிக்கும் போது அதனை றிஷாட்  மக்களுக்கு பகிரங்கபடுத்துகின்றமை

D. தனிமனிதனாய் வந்த றிஷாட் இன்று தனக்கென ஒரு கட்சியையும் சக்தி மிக்க ஆட்சியை தீர்மானிக்கும் தரப்பாகவும் தன்னை விடவும் முதன்மை பெற்றுள்ளமை

E. சமூகத்தில் தனக்கிருந்த செல்வாக்கும் அந்தஷ்தும் படிப்படியாக றிஷாட்டால் குறைந்து தனக்கு மக்களின் வெறுப்புக்கள் அதிகரிக்கின்றமை

F. எந்த அரசாங்கம் வந்தாலும் றிஷாட்டுக்கு  தரமான அமைச்சு வழங்கப்படுவதுவும் அந்த அமைச்சை சிறப்பாக செய்து அரச தலைவர்களிடம் முதன்மை பெறுகின்றமை

G. ஹக்கீம் தனது இயலாமையை மறைக்கவும் தனது கைலாகாத தனம்  வெளிப்பட்டுவிடும் எனும் பீதியால் றிஷாட்டை மக்களிடம் பிழையாக காட்ட முனைகின்றமை

H. கிழக்கிலங்கையில் றிஷாட் பதியுதீனின் வருகையால் ACMC வலுவடைந்ததுடன் SLMC கும் றவூப் ஹக்கீமுக்கும் மக்கள் சரிவு நாலுக்கு நாள் அதிகரித்தமை.

I. எதிர்பார்ததை விடவும் உள்ளுர் அதிகார சபைகளின் அதிகாரங்களை றிஷாட் பதியுதீன் தனதாக்கியமை

J. SLMC கோட்டையாக இருந்த பல பகுதிகளும் மக்களும் றிஷாட் பதியுதீனில் தலைமையின் பின்னால் இணைகின்றமை.

K. மேலும் தலைவர் றிஷாட் பதியுதீன் மீது தனிப்பட்ட வைத்தெரிச்சலும் குரோத மனப்பாங்கும் கசட்டுத்தனமும்

03. #இனவாத அமைப்புக்களும் இனவாதிகளும்  :- 

BBS, சிங்கலே, சிங்கள ராவைய,டயஸ்போரா, RSS, போன்ற பல்வேறு இனவாத அமைப்புக்களும் ஞான சார, டான்பிரசாத், ஆனந்த சாகர, இன்பராசா போன்ற கடும்போக்கு வாதிகளாளும்

 A. சமூகத்திற்கு இழைக்கபடும் அநீதிகளை துணிவுடன் எதிர்த்து நின்று குரல் கொடுக்கின்றமை.

B. சட்டத்திற்கு முரனான இனவாத செயற்பாட்டிற்கும்,  வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலையும் நாட்டில் அமுல்படுத்த தடையாக இருக்கின்றமை

C. பள்ளிகளை உடைத்தும் குர்ஆனை வஞ்சித்தும் இனவாதிகள் செயல்பட்டபோதும் இஸ்லாமியர்களின் உடமைகளும் வாழ்விடங்களும் நாசப்படுத்தப்பட்டபோதும் பார்வையாளர்களாக இருந்த தலைவர்களுக்கு மத்தியில் றிஷாட்  உரத்து குரல்கொடுத்து அரசையும் இனவாத சக்திகளையும் துணிவுடன் எதிர்க்கின்ரமை.

D. தமது இருப்பை தக்கவைத்து இலாபமீட்டும் இவர்களுக்கு இடஞ்சலாக றிஷாட் பதியுதீன் உள்ளேயும் வெளியேயும் செயல்படுகின்றமை.

E. முஸ்லிம் நாடுகளில் றிஷாட் பதியுதீனுக்கு செல்வாக்கு கானப்படுகின்றமை

04.மஹிந்தவும் அவரின் சார்பானவர்களும் :- 

 A. இலங்கையில் ஆட்சி  மஹிந்தவின் பரம்பரைகே சொந்தம் எனும் அசைக்க முடியாத ஆட்சியாய் இருந்த மஹிந்தவையும் அவரின் அரசையும் ஆட்டம் கானவைத்து ஆட்சியை றிஷாட் மாற்றியதால் றிஷாட்டை எப்படியாது சிக்கவைத்து தனது பழியை தீர்த்தல்.

 B. மீண்டும் தனது சர்வாதிகாரத்தை  அமுல் படுத்த இந்த றிஷாட் தடையாக உள்ளமை.

 C. வங்குரோத்து அடைந்துள்ள தமது அரசியலை வலிமைப்படுத்தி மறுபடியும் தமது திருவிளையாடல்களை ஆரம்பிக்க றிஷாட்டை ஏதேனும் பொறியில் சிக்கவைத்து தமது சுகபோகத்தை அமுல்படுத்தும் நரித்திட்டங்கள்.

D. முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைக்கும் செயல்களுக்கும் தமது தேவைக்காக அரவனைக்குமே செயற்பாடுகளையும் றிஷாட் பதியுதீன் எதிர்க்கின்றமை

05. அரசும் அரசின் ஏஜன்டுகளும் : - 

A. மக்களை நசுக்கும் அரசாங்கத்தின் பலதிட்டங்களை துணிவுடன் எதிர்கின்றமை (புத்தளத்து குப்பை விவகாரம்)

B. நாட்டில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை வெளிநாட்டுகளுக்கு எடுத்துச் செல்கின்றமை(திகன சம்பவம்)

C. அரச தலைவர்கள் விடும் தவறுகளை நாடாளுமன்றிலும் வெளியிலும் துணிவுடன் தட்டிக்கேற்கின்றமை

D. எல்லை நிர்னய விடயத்திலும் புதிய தேர்தல் முறையிலும் விட்டுக் கொடுப்பு இன்றி உறுதியா உள்ளமை

E. முஸ்லிம்கள் விடயத்தில் நிலையான போக்கை கடைப்பிடிக்கின்றமை

F. சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகளில் உறுதியாக நிற்கின்றமை (வவுனியா GA நியமனம்)

G. முஸ்லிம் நாடுகளில் றிஷாட் பதியுதீனுக்கு செல்வாக்கு கானப்படுகின்றமை

H. முஸ்லிம் மக்களின் பொருளாதாரம், பரம்பரை கணி போன்றவற்றை நாசப்படுத்தும்போதும், ஆக்கிரமிக்கும் போதும் துணிவுடன் அரசை எதிர்கின்றமை. ( நல்லாட்சி அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான 22 சம்பவங்களையும் தட்டிக்கேட்டமை)

இவ்வாறு அனைவரும் தமது தனிப்பட்ட முன்னெடுப்புக்களை வென்றெடுக்க ஒரே நிகழ்ச்சி நிரலில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வீழ்த்த பல்வேறு சதிகளை செய்து றிஷாட் பதியுதீனை கொலை செய்ய தூண்டுதலான காரணங்களாகும்.

சமூகத்திற்காக இணைந்து பயணிக்க வேண்டிய எம்மவர்கள் காட்டிக் கொடுப்புக்களையும் கழுத்தறுப்புக்களையும் செய்வது தலைவரை கொலை செய்வதற்கு மாற்று சமூகத்திற்கும் சக்திகளுக்கும் இலகுவான விடயமாக உள்ளது.

இறைவனே எமக்கும் எமது தலைவருக்கும் பாதுகாவலனாவான் நாம் இறைவனிடமே பிராத்திப்போமாக.

பாதுகாப்பின் அதிபதியே! உன்னையே வணங்குகின்றோம் உன்னிடமே உதவி தேடுகின்றோம் 
★***************★*************★***********
எங்கள் இறைவா! உன்னை தவிர எந்த சக்தியாலும் பாதுகாப்பு வழங்கமுடியாது. பாதுகாப்பின் அதிபதி நீயே அமைச்சர் றிஷாட் அவர்களுக்கு முலுமையான பாதுகாப்பை வழங்குவாயாக.

-ACM.FAISAL

உன்னையும் உனது தூதுவரையும் உனது கலாமையும் வஞ்சிக்கும் சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர் றிஷாட்டை பாதுகாப்பாயாக.

எமது சமூகத்தின் உடமைகளை நாசப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை துடைக்க துணிந்து போறாடும் அமைச்சர் றிஷாட்டை பாதுகாப்பாயாக.

எழை தாய் வயிற்றில் பிறந்து ஏழைகளுக்காகவும் உனது "கலாமையும் நபி வழியையும்" பின்பற்றும் சமூகத்திற்காகவும் தியாகத்துடன் பாடுபடும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை பாதுகாப்பாயாக.

பாதுகாவலனே உன் நாட்டம் இன்றி எதுவும் இல்லை அன்னிய இனவாத சக்திகள் எமது அமைச்சருக்கு எதிராக தீட்டும் சதிகலை முறியடிப்பாயாக

எங்கள் இறைவா ஏழைகள் நாம் இன்று உனது உதவியினால் அமைச்சரின் முயற்சியினால் நிம்மதியான வாழ்வை சீரழிக்க நினைக்கும் கயவர்களை அழித்திடுவாயாக.

உனது கலாமை சுமக்கும் ஹாபில்களையும் உலமாக்களையும் உருவாக்க உதவிய அமைச்சர் றிஷாட்டை பாதுகாப்பாயாக.

உன்னை சுஜூது செய்ய தடுத்த பள்ளிவாயல்களை மீண்டு திறக்கவும் புதிய பல மஸ்ஜிதுகளை உருவாக்கி உன்னை வழிபட வாப்பளித்த அமைச்சர் றிஷாட்டை நீ பாதுகாப்பாயாக.

ஈவிரக்கம் இன்றி எமது சமூகத்தை இனவாத கூட்டம் வஞ்சித்த போது துனிந்து குரல் கொடுத்த அமைச்சர் றிஷாட்டை நீ பாதுகாப்பாயாக.

அறிவுக்கும் ஆரோக்கியத்திற்கும் உரித்தான இறைவனே!

ஏழை மாணவர்களின் கல்விக்கு கல்விக்கூடம் அமைத்தவரையும் நோயுற்ற வாழ்வில் இருந்து ஆரோக்கியம் பெற வைத்தியசாலைகள் தந்த அமைச்சர் றிஷாட் அவர்களின் வாழ்வை வளமாக்கி "நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும்" வழங்கி

நல்ல திடகாத்திரத்தையும், ஆளுமையையும் அதிகமாக வழங்கிடு எங்கள் இறைவா.

இஸ்லாமிய உறவுகளே உங்களின் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் புனித நோன்பிளும் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பாதுகாப்புக்காக இறைவனிடம் இருகரம் ஏந்துங்கள்.

இறைவன் உங்களின் துவாக்களை நிச்சயம் ஏற்றுக்கொள்வானாக.
றிஷாட் பதியுதீனை கொலை செய்வதின் மர்மம் - பரபரப்பு தகவல்கள் வெளியானது றிஷாட் பதியுதீனை கொலை செய்வதின் மர்மம் - பரபரப்பு தகவல்கள் வெளியானது Reviewed by Vanni Express News on 10/10/2018 10:14:00 PM Rating: 5