பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து முற்றாக தடை

பெட்ரோல் விலை அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) காலை முதல் வைக்கால, தோப்புவ பாலத்தை மறைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று காலை 11 மணி முதல் கொழும்பு - சிலாபம், நீர்கொழும்பு - குருணாகல் மற்றும் நீர்கொழும்பு - குளியாப்பிட்டிய ஆகிய பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பாதையூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து முற்றாக தடை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து முற்றாக தடை Reviewed by Vanni Express News on 10/08/2018 05:30:00 PM Rating: 5