உலகின் மிக நீளமான கடல் பாலம் திறந்து வைப்பு

உலகின் நீளமான கடல் பாலத்தை இன்று சீனா திறந்து வைத்துள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த நிகழ்வில் கலந்து பொண்டு பாலத்தை திறந்து வைத்துள்ளார். 

இருபது பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்கொங்கையும் சீனாவையும் இணைக்கிறது. 

இந்தப் பாலம் 55 கிலோ மீட்டர் நீளமானது என்று அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

பெரும் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை விமர்சகர்கள் ’வெள்ளை யானை’ என்று அழைக்கிறார்கள். 

இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக நீளமான கடல் பாலம் திறந்து வைப்பு உலகின் மிக நீளமான கடல் பாலம் திறந்து வைப்பு Reviewed by Vanni Express News on 10/23/2018 03:01:00 PM Rating: 5