கனடாவில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கஞ்சாவை மருத்துவ தேவைகளுக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவில் சட்டரீதியான கஞ்சா விற்பனை ஏற்றுக்கொள்ளப்பட்டமை அங்கு முதலீடு செய்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கஞ்சா பயன்படுத்துவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, பிரதமர் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்குவேன் என்று தனது பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கத்தய நாடுகளைப் பொறுத்தவரை, உருகுவே நாட்டிற்கு பின்னர், கனடாதான் கஞ்சாவை சட்டபூர்வமாக மாற்றிய நாடாக விளங்குகின்றது.

கனடாவில் இந்த நடவடிக்கை நேர்மறை விளைவைக் கொடுத்தால், பிற நாடுகளும் இந்தப் பயிர் செய்கையை பின்பற்றும் என்று, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடாவில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. Reviewed by Vanni Express News on 10/18/2018 11:42:00 PM Rating: 5