ரோஸி சேனநாயக்கவிற்கு சவால் விடுத்துள்ள சம்பிக ரணவக்க

கொழும்பு நகரத்தில் மீதொட்டுமுல்ல குப்பை மேட்டை போன்று மற்றுமொரு குப்பை மேடு உருவாகுவது தன்னுடைய தலையீட்டால் தான் தடுக்கப்பட்டது என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். 

இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாநகர சபையினால் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யது மேற்கொள்ள செயற்பாடுகளினால் இந்த பிரச்சினை இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தங்களது அமைச்சு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொழும்பு குப்பை முகாமைத்துவ நடவடிக்கையில் இருந்து விலகலாம் எனவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனநாயக்கவிற்கு முடிந்தால் இந்த நடவடிக்கையினை சரியான முறையில் செய்து முடிக்கும் படி சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரோஸி சேனநாயக்கவிற்கு சவால் விடுத்துள்ள சம்பிக ரணவக்க ரோஸி சேனநாயக்கவிற்கு சவால் விடுத்துள்ள சம்பிக ரணவக்க Reviewed by Vanni Express News on 10/09/2018 05:10:00 PM Rating: 5