66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் பறிமுதல்

டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

ஒரு வருட காலத்திற்கு முன்னர் வத்தளை பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு டுபாய் நாட்டில் இருந்து இரண்டு கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்வதற்கு எவரும் வராத காரணத்தால் சுங்க அதிகாரிகள் அதனை சோதனை செய்துள்ளனர். 

இதன்போது பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த ஒரு தொகை சிகரட்டை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் பறிமுதல் 66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் பறிமுதல் Reviewed by Vanni Express News on 10/19/2018 10:13:00 PM Rating: 5