நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் மானஸ்வி

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. 

நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசும் வசனம் பிரபலமானது. மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள். இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார். 

கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20 படங்கள் மானஸ்வி கைகளில் இருக்கிறது. மகள் பற்றி கொட்டாச்சி கூறும்போது ‘அவள் சினிமா காட்சிகளை காப்பி செய்து நடித்த சில காட்சிகளை வீடியோவாக எடுத்து முகநூலில் பகிர்ந்தேன். 

அதை பார்த்துவிட்டு தான் இமைக்கா நொடிகள் வாய்ப்பு வந்தது. நான் சின்னதாக காமெடியன் வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் என் மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி. நயன்தாரா அடிக்கடி மானஸ்வியுடன் பேசுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்.
நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் மானஸ்வி நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் மானஸ்வி Reviewed by Vanni Express News on 10/01/2018 11:48:00 PM Rating: 5