கொழும்பு குப்பைகளை புத்தளம் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்புக்கள் - சற்று சிந்தியுங்கள்

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் 

கொழும்பு குப்பைகளை புத்தளம் கொன்டு வருவதால் புத்தளத்துக்கு மட்டுமல்ல் பாதிப்பு அதன் பாதிப்பு ராகம, ஜாஎல, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, கொச்சிகடை சவரானை, சிலாபம், ஆராச்சிக் கட்டுவ, முந்தல் ,உடப்பு, மதுரங்குளி என்று எல்லா இடங்களையும் பாதிக்கப் போகின்றது. 

குப்பைகளில் உள்ள கிருமிகள் இந்த ஊர்களில் எல்லாம் பரவும் . இதனால் இப்பிரதேசங்களில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எல்லொரும் பாதிக்கப் படுவர். தொற்று நோய்கள், நுரையீரல் அலற்சி, தடிமன், இருமன், வாந்திபேதி, காய்ச்சல் என பல்வேறு நோய்கள் அவர்களைத் தாக்கப் போகின்றது. 

எனவே இது புத்தள நகரத்து மக்களினது பிரச்சினை மட்டுமல்ல. இது நாடு தழுவிய போராட்டம். ராகம, ஜாஎல, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, கொச்சிகடை சவரானை, சிலாபம், ஆராச்சிக் கட்டுவ, முந்தல் ,உடப்பு, மதுரங்குளி மக்களையும் சேர்த்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வு காணப் பட வேண்டும். 

எனவே புத்தளத்து தலைவர்கள் கௌரவ பிக்குகள் , இந்து கிறிஸ்தவ மதகுருமார் போன்றவர்களையும் சேர்த்துக் கொண்டு ஏனைய பிரதேச மக்களைச் சந்தித்து கதைத்து இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நகரங்களில் உள்ள பிரதேச சபைகள் மூலமும் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியும்.
கொழும்பு குப்பைகளை புத்தளம் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்புக்கள் - சற்று சிந்தியுங்கள் கொழும்பு குப்பைகளை புத்தளம் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்புக்கள் - சற்று சிந்தியுங்கள் Reviewed by Vanni Express News on 10/06/2018 11:19:00 AM Rating: 5