டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டக்வத் லூவிஸ் முறைப்படி இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தம்புள்ளையில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இங்கிலாந்து அணி சார்பாக மோகன் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க 44 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 29 ஓவர்களில் 05 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. 

தொடர்ந்து மழை பெய்ததால் டக்வத் லூவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி Reviewed by Vanni Express News on 10/13/2018 05:31:00 PM Rating: 5