அடுப்பினை பற்றவைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் பெண் பலி

வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அடுப்பினை பற்றவைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (30) இரவு இந்த சம்வபம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வெலிமடை, பொரகஸ் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுப்பினை பற்றவைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் பெண் பலி அடுப்பினை பற்றவைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் பெண் பலி Reviewed by Vanni Express News on 10/01/2018 04:04:00 PM Rating: 5