கொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி

-கொழும்பு விசேட நிருபர்

கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அஜ்மி எனும் 24 வயதுடைய இளைஞர் மீது சற்றுமுன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் ஒன்றில் வருகைதந்த இரண்டு நபர்களினாலேயே குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருந்தது.

காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் (Sep-12) திகதி இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி கொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி Reviewed by Vanni Express News on 10/20/2018 05:32:00 PM Rating: 5