காதலியை தேடிச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கரன்தெனிய, மடகும்புர பகுதியில் உள்ள வயல் வெளியில் மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சார கம்பியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று இரவு 7 மணியளவில் குறித்த இளைஞனுடைய சடலத்தை பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞன் நேற்று அதிகாலை வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அவர் மாலை வரை வீட்டிற்கு வராத காரணத்தினால், பெற்றோர் கரன்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

பின்னர் பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது குறித்த இளைஞனின் காதலியின் வீட்டிற்கு அருகில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கரன்தெனிய, கட்டுகன்ன பகுதியை சேர்ந்த ரஞ்சித் சுரங்க எனும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியை தேடிச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு காதலியை தேடிச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 10/03/2018 05:33:00 PM Rating: 5