மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

-ஐ. ஏ. காதிர் கான் 

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, தாம் வாழும் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை, இந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை, நாட்டில் 39 ஆயிரத்து 799 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலானவர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, எதிர்வரும் 2 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென்றும், தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், இந் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனையைச் செய்து கொள்ளுமாறும், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து Reviewed by Vanni Express News on 10/16/2018 03:42:00 PM Rating: 5