திடீர் நிலநடுக்கம் - தூக்க கலக்கத்தில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்

வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் நிலநடுக்கம் - தூக்க கலக்கத்தில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் திடீர் நிலநடுக்கம் - தூக்க கலக்கத்தில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் Reviewed by Vanni Express News on 10/10/2018 09:36:00 PM Rating: 5