மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலய மாணவன் யூசுப் புலமையில் சித்தி

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் முஹம்மது லாகிர் முஹம்மது யூசுப்,  இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில்  திருகோணமலை மாவட்டத்தில் 164  புள்ளிகளைப் பெற்று  தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் முஹம்மட்  தர்ஜுன்  தெரிவித்துள்ளார்.

இதற்காக அரும்பாடுபட்ட பாடசாலையின் அதிபர் முஹம்மட் தர்ஜுன் , புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியை  ஸக்கீஹா,  வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், ஆகியோர்களுக்கு பெற்றோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலய மாணவன் யூசுப் புலமையில் சித்தி மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலய மாணவன் யூசுப் புலமையில் சித்தி Reviewed by Vanni Express News on 10/17/2018 11:52:00 PM Rating: 5