யுத்த பூமியில் கையை இழந்தும் மனவுறுதியுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி

இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் ஒரு கையை இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். 

யுத்த பூமியில் இருந்து அங்கம் இழந்தாலும் மனவுறுதி தளராமல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளார். 

முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான ஞானசீலன் ராகினி என்ற மாணவியே 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். 

கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற செல் தாக்குதலில் குறித்த மாணவியின் தாய் உயிரிழந்துள்ளதுடன், மாணவி ஒரு கையை இழந்துள்ளார். 

தற்போது தந்தை மற்றும் சகோதரி ஒருவருடன் வசித்து வரும் குறித்த மாணவி கடந்த பரீட்சையின் தனது திறமையை வௌிப்படுத்தியுள்ளார். 
யுத்த பூமியில் கையை இழந்தும் மனவுறுதியுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி யுத்த பூமியில் கையை இழந்தும் மனவுறுதியுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி Reviewed by Vanni Express News on 10/06/2018 05:02:00 PM Rating: 5