உலகக் கிண்ணத்தை சுவீகரித்த அர்ஷானுக்கு அமைச்சர் பைஸர் புகழாரம்

-ஐ. ஏ. காதிர் கான் 

இங்கிலாந்தில் 44 நாடுகள் பங்குபற்றிய "கலப்பு தற்காப்புக் கலைகள்" (Mixed Martiol Arts)

உலக வெற்றிக் கிண்ணப் போட்டியில், சர்வதேச வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்ட விளையாட்டு வீரர் எம்.யூ.எஸ்.எம். அர்ஷான், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை, விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து நேற்று சந்தித்தார். இதன்போது, அமைச்சர் அவருக்கு கைலாகு கொடுத்து, அவரின் திறமைகளைப் பாராட்டி, அவருக்கு புகழாரம் சூட்டினார்.

விளையாட்டு வீரர் அர்ஷானின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாக, அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதேவேளை, அர்ஷானின் விளையாட்டுத்துறை தொடர்பிலான சகல நடவடிக்கைகளை, மேலும் மேம்படுத்தி, அதற்கு தனது பூரண ஒத்துழைப்பை, சகல மட்டத்திலிருந்து பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் இதன்போது அர்ஷானிடம் கூறினார்.

கண்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷான், கண்டி - புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்தை சுவீகரித்த அர்ஷானுக்கு அமைச்சர் பைஸர் புகழாரம் உலகக்  கிண்ணத்தை சுவீகரித்த அர்ஷானுக்கு அமைச்சர் பைஸர் புகழாரம் Reviewed by Vanni Express News on 10/18/2018 11:16:00 PM Rating: 5