3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்

அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. 

ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியது. 

இந்த செய்தியால், உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட பேஸ்புக் சர்ச்சையில் சிக்கியது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தவறு நடந்து விட்டதாக ஒப்புக் கொண்டார். 

இந்த நிலையில் தற்போது பேஸ்புக்கில் மேலும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி நபர்களின் மற்ற தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்றொரு 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட ஹேக்கர்கள் முயற்சித்து உள்ளனர். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு மீறலை தீர்க்க அவர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பேஸ்புக்கில் சிறிய அளவிலான தாக்குதல்களின் வாய்ப்புகளை அது நிராகரிக்கவில்லை.
3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் Reviewed by Vanni Express News on 10/13/2018 10:31:00 PM Rating: 5