ஆடை விற்பனை நிலையத்தில் பரவிய தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர்

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்றும் ஈடுபட்டுள்ளது. 

இலங்கை விமானப் படையின் பெல் 212 ரக ஹெலிகப்டர் ஒன்று தீயை அணைக்கும் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். 

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதுடன், அந்த விற்பனை நிலையம் முற்றாக தீயில் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து வேகமாக பரவியுள்ளதுடன், அருகில் இருந்து டயர் விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

இந்த தீ விபத்து காரணமாக 174ம் இலக்க பஸ் வீதியான பொரள்ளை - கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடை விற்பனை நிலையத்தில் பரவிய தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர் ஆடை விற்பனை நிலையத்தில் பரவிய தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர் Reviewed by Vanni Express News on 10/11/2018 03:37:00 PM Rating: 5