பேராதனை பொறியியல் பீட அருகில் பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி - கம்பளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தீக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.