அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை

-பாறுக் ஷிஹான்    

கிழக்கு மாகாணத்தில் மாரி கால பருவ மழை  ஆரம்பித்துள்ளமையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதிகமான பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக சந்தையில் மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது.

தற்போது பெய்யும் மழை காரணமாக  நன்னீர் மீன்  பிடி   கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில்  கோல்டன் செப்பலி கணையான்  கொய் கொடுவா கெண்டை விரால் சுங்கான் விலாங்கு   போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.
அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை Reviewed by Vanni Express News on 10/03/2018 04:20:00 PM Rating: 5