எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு - விபரம் இதோ

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 06 ரூபா மற்றும் 08 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 149 ரூபாவில் இருந்த 155 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 161 ரூபாவில் இருந்து 169 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சூப்பர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனவே, சூப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு - விபரம் இதோ எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு - விபரம் இதோ Reviewed by Vanni Express News on 10/10/2018 09:58:00 PM Rating: 5