பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தே அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எரிபொருள் நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள பெட்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் Reviewed by Vanni Express News on 10/28/2018 10:54:00 PM Rating: 5