பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக முற்று முழுதாக தடை

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முற்று முழுதாக தடைப்பட்டுள்ளன.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்டி நெருக்கடியான நிலைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் மரணித்ததுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக முற்று முழுதாக தடை பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக முற்று முழுதாக தடை Reviewed by Vanni Express News on 10/29/2018 02:42:00 PM Rating: 5