157 தனி வீடுகளைக் கொண்ட “இளஞ்செழியன் புரம்” கிராமத்தின் திறப்பு விழா

-க.கிஷாந்தன்

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் பண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 157 தனி வீடுகளைக் கொண்ட “இளஞ்செழியன் புரம்” கிராமத்தின் திறப்பு விழா அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரிண் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பிரதி அமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார், முதலானோர் கலந்து கொண்டார்கள்.

அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்து, வீடுகளை திறந்து வைத்ததோடு, வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தையும் வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.
157 தனி வீடுகளைக் கொண்ட “இளஞ்செழியன் புரம்” கிராமத்தின் திறப்பு விழா 157 தனி வீடுகளைக் கொண்ட “இளஞ்செழியன் புரம்” கிராமத்தின் திறப்பு விழா Reviewed by Vanni Express News on 10/13/2018 03:15:00 PM Rating: 5