சமாதானத் தூதுவ விருது வழங்கல் பட்டமளிப்பு விழா

-ஐ. ஏ. காதிர் கான் 

சி.பி.எஸ். சமாதானத் தூதுவ விருது வழங்கல் மற்றும் விஸ்வம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இதன்போது, தெஹிவளையில் இயங்கிவரும் இன்டர்நெஷனல் நேர்சிங் எகடமிக் மெடிக்கல் கெம்பஸ் ( ஐ.என்.ஏ. மெடிக்கல் கெம்பஸ்) இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பினைக் கற்பதற்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், எந்தவொரு நாட்டிலும் அரச அல்லது தனியார் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா மற்றும் பட்டமேற் படிப்புக்களை, தொலை தூர நோக்குக் கல்வி மூலமாகவும் அல்லது அங்கு சென்றும் படிக்கும் சந்தர்ப்பம், குறித்த மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

 இதற்கான அனுமதிச் சான்றிதழை, யுனைட்டட் நேஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் மதுரசிங்கவிடமிருந்து கல்லூரியின் பணிப்பாளர் றிமாஸா முனாப் பெற்றுக்கொள்கிறார்.
சமாதானத் தூதுவ விருது வழங்கல் பட்டமளிப்பு விழா சமாதானத் தூதுவ விருது வழங்கல் பட்டமளிப்பு விழா Reviewed by Vanni Express News on 10/15/2018 11:20:00 PM Rating: 5