வடக்கு - கிழக்கு மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 65 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட இணக்கப்பாட்டுக் குழுவில் சிபாரிசுக்கு அமைவாக ஒரு வீட்டு அலகுக்கு 1 280 000 ரூபாவுக்கு வழங்குவதற்கு அமைவாக ND Enterprises (India), Yapka Developers(Pvt.) Ltd.(SriLanka) மற்றும் Archedium(Pvt)Ltd.(SriLanka) என்ற நிறுவன குழும்பத்திற்கு வழங்குவதற்காக வடக்கு அபிவிருத்தி இந்து மத அலுவல்கள் அமைச்சர் டிஎம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு - கிழக்கு மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வடக்கு - கிழக்கு மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் Reviewed by Vanni Express News on 10/18/2018 11:56:00 PM Rating: 5