காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல்

-பாறுக் ஷிஹான்

யாழ்.மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரும் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துாிதப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான உயா்மட்ட கலந்துரையாடல் நேற்று(16) மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாலை 3 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலா் அ லுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரை யாடலில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாா் வசம் உள்ள காணிகளின் விபரங்கள் மற்றும் அவற்றை விடுவிப்பதற் கு எடுக்கப்படவேண்டி நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினா்களான மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ இராணுவ, கடற்படை, விமானப்படை உயா் அதிகாாிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 10/17/2018 04:03:00 PM Rating: 5