அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியாகிய முக்கிய செய்தி

தனக்கு அதிகாரம் காணப்பட்டாலும் எதேச்சாதிகாரமான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அலறி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது;

“கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமருக்கு எதிராக வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தது. அன்று அவருக்கு பாராளுமன்றம் நம்பிக்கை வெளியிட்டது. எனவே, அன்றைக்கும் இன்றைக்கும் இடையில் பாராளுமன்றத்தில் மாற்றமொன்று இடம்பெற்றில்லை.”

“பிரதமரை நீக்க அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே காணப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையே இந்த நிலை ஏற்பட்டது. அன்றும் அதற்கு முன்னைய தினமும் பாராளுமன்றம் கூடியது. குறித்த இரண்டு தினங்களிலும் அரசாங்கத்தின் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு இருக்கும்போது அரசாங்கத்துக்கு ஆதரவில்லை என்று எவ்வாறு கூற முடியும். எனவே இது பிழையான விடயம்”. என குறிப்பிட்டார்.

இதேவேளை, “பிரதமரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை, அதிகாரம் இருந்தாலும் எதேச்சாதிகாரமான முறையில் அதனை பயன்படுத்த முடியாது” என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.
அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியாகிய முக்கிய செய்தி அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியாகிய முக்கிய செய்தி Reviewed by Vanni Express News on 10/28/2018 03:20:00 PM Rating: 5