பாராட்டுக்களும் கெளரவங்களும் சமூகத்தில் சிறந்த மனிதர்களை உருவாக்கட்டும் - பிரதியமைச்சர் மஸ்தான்

-ஊடகப்பிரிவு

ஜொபி கடலுணவு நிறுவன அனுசரணையுடன் வாலிபர் விளையாட்டுக் கழக கெளரவிப்பு விழாவை முன்னிட்டு தலைமன்னார் பியர் மைதானத்தில் மாபெரும் மென்பந்து போட்டியும்,பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் கல்வியில் சிறப்பு அடைவு மட்டங்களை எய்தியவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் என இன்று கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் இக் கருத்துக்களை குறிப்பிட்டார். 

மன்னார் பிரதேச செயலாளர் பரமதாஸ்,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கெளரவ பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாவது.

சமூக சிற்பிகளான சான்றோரின் சேவைகளை நாம் பாராட்டி நினைவு கூறுகின்ற பொழுது அது நிகழ்கால வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றுப் பாடமாக, ஊக்குவிப்பாக அமைகின்றது.

இந்த மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் நாங்கள் கரிசனையோடு செயற்பட்டிருக்கிறோம் இன்னும் சில வாரங்களுக்குள் காணிப்பத்திரங்கள் உரியவர்களுக்கு வந்து சேரும்.

மக்களின் வறுமையை  அரசியலுக்கு பயன்படுத்தி கட்சி வளர்க்கும் ஈனத்தனமான செயற்பாடுகளிலிருந்து விலகி நின்று நேர்மையான அரசியல் பாதையொன்றை நாம் வகுத்து எமது அரசியல் பயணங்களை மேற்க்கொள்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் இளைஞர் கழகத்தினர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 
பாராட்டுக்களும் கெளரவங்களும் சமூகத்தில் சிறந்த மனிதர்களை உருவாக்கட்டும் - பிரதியமைச்சர் மஸ்தான் பாராட்டுக்களும் கெளரவங்களும் சமூகத்தில் சிறந்த மனிதர்களை உருவாக்கட்டும் - பிரதியமைச்சர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 10/01/2018 03:42:00 PM Rating: 5