முல்லைத்தீவு வெலி ஒயா பகுதிக்கு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் ஊடாக 1கோடி 80 இலட்சம் நிதியொதுக்கீடு

-ஊடகப்பிரிவு.

முல்லைத்தீவு வெலி ஒயா பகுதிக்கு மீழ் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக 1கோடி 80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிக்கும் நோக்குடன் மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்த பாரிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

வெலி ஓயா மக்களின் கருத்துக்களை உள்வாங்கி  பிரதியமைச்சர் மஸ்தான் அவர்களினால் முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் அமைப்புக்கள் கமக்காரர் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன.

அத்துடன் குறித்த நிதியை தமது பகுதிக்கு ஒதுக்கீடு செய்த பிரதியமைச்சர் மஸ்தான் அவர்களுக்கு மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்,

இது முதற்கட்டமாக வழங்கப்படும் நிதி எனவும் விரைவில் மேலதிகமான நிதிகளையும் பெற்று  இந்த பகுதி அபிவிருத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலை செல்லும் வறிய நிலையிலுள்ள மாணவர்களின் நலன்கருதி ஒரு தொகை துவிச்சக்கர வண்டிகளும் பிரதியமைச்சர் மஸ்தான் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு வெலி ஒயா பகுதிக்கு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் ஊடாக 1கோடி 80 இலட்சம் நிதியொதுக்கீடு முல்லைத்தீவு வெலி ஒயா பகுதிக்கு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் ஊடாக 1கோடி 80 இலட்சம் நிதியொதுக்கீடு Reviewed by Vanni Express News on 10/23/2018 05:37:00 PM Rating: 5