நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சீசெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். 

இன்று (10) காலை 11.20 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல். 708 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

இதேவேளை நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடு திரும்பியுள்ளார். 

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை 08.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் கூறினார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த 03ம் திகதி ஆரம்பித்திருந்தார்.
நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் Reviewed by Vanni Express News on 10/10/2018 12:33:00 PM Rating: 5