புதிய பிரதமர் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கத் தவறினால் மீண்டும் சிக்கல் ஏற்படும்

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் சிக்கல் நிலைமைக்கு சிறந்ததொரு தீர்வுதான் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் எனவும், அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் சிக்கலான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வானொலியொன்றுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய பிரதமர் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கத் தவறினால் மீண்டும் சிக்கல் ஏற்படும் புதிய பிரதமர் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கத் தவறினால் மீண்டும் சிக்கல் ஏற்படும் Reviewed by Vanni Express News on 10/28/2018 03:04:00 PM Rating: 5