மகிந்தவுக்கு ஏன் தமிழர்கள் ஆதரவு வழங்கவில்லை ?

-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

மகிந்த ராஜபக்சவை தமிழர்கள் எதிர்த்தது புலிகளை தோற்கடித்து யுத்தத்தை வென்றார் என்பதற்காக அல்ல. மாறாக இறுதி யுத்தத்தில் முள்ளியவாய்க்காலில் ஏற்ப்பட்ட ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கு உத்தரவிட்டார் என்பதற்காகத்தான்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தர்கள் கொலை செய்யப்பட விவகாரம் உட்பட இன்னும் சில ரகசியங்களையும் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில்தான் சரத்பொன்சேக்கா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

“எய்தவன் இருக்க அம்பை நோவதா” என்ற ரீதியில் அத்தனை படுகொலைகளும் செய்யப்படுவதற்கு அன்றைய மகிந்தவும், அவரது சகோதரர் கோட்டபாயாவினது உத்தரவுகள்தான் காரணம் என்று தமிழ் மக்கள் ஆதாரபூர்வமாக கூறியுள்ளார்கள்.

இராணுவத்தினர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். அன்று ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அமைவாக மனிதப்படுகொலைகளை செய்த அதே இராணுவம்தான் இன்றய ஆட்சியில் பல ஆயிரம் ஏக்கர் தமிழர்களின் நிலங்களை விடுவித்துள்ளார்கள்.

எனவே இங்கே இராணுவம் அல்ல பிரச்சினை. இராணுவத்துக்கு உத்தரவு பிரப்பிப்பவர்கள்தான் பிரச்சினை. அதனால்தான் தமிழர்கள் மகிந்தவை ஆதரிக்கவில்லை.
மகிந்தவுக்கு ஏன் தமிழர்கள் ஆதரவு வழங்கவில்லை ? மகிந்தவுக்கு ஏன் தமிழர்கள் ஆதரவு வழங்கவில்லை ? Reviewed by Vanni Express News on 10/14/2018 03:14:00 PM Rating: 5