அரசாங்கமோ அல்லது நாடோ இருக்கின்றதா ?

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிக்கல்கள் காரணமாக நாட்டு மக்களே இழப்பீடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று (17) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இன்று அரசாங்கமோ அல்லது நாடோ இருக்கின்றதா என்பது எமக்கு தற்போது கேள்விக்குரியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமோ அல்லது நிர்வாக திட்டமோ இல்லாமல் செயற்படுவதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பிரதமர் கூறுவது ஜனாதிபதிக்கு தெரியாது எனவும் இவ்வாறான ஒரு நிலைமையில் நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது சிக்கலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமோ அல்லது நாடோ இருக்கின்றதா ? அரசாங்கமோ அல்லது நாடோ இருக்கின்றதா ? Reviewed by Vanni Express News on 10/18/2018 11:23:00 PM Rating: 5