மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புக்குரிய விடயம்

உலக வரைபடத்தில் இரத்தக்கறையாக அமைந்திருந்த இலங்கையை அதிலிருந்து விடுவிக்க நல்லாட்சி அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

உலக சந்தையில் ஒரு பிப்பாய் மசகு எண்ணெயின் விலை குறைந்திருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையைக் குறைக்குமாறு வழங்கிய நீதிமன்ற தீர்ப்பை கருத்திற் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ இன்று எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புக்குரிய விடயமாகும். 

விலை சூத்திரத்திற்கு அமைய, பாவனையாளர்களுக்கு மிகக் குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் விலையைத் தீர்மானிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமது ஆட்சிக்காலத்தில் தான் நடந்து கொண்ட விதம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மறந்துவிட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின், மாத்தறை தொகுதிக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ரூபாவின் பெறுமதி குறைவடையும் வேகத்தையும் விட கூடுதலான வேகத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் வீழ்ச்சி கண்டுவருவதாக குறிப்பிட்டார். 
மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புக்குரிய விடயம் மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் சூத்திரம் குறித்து பேசுவது நகைப்புக்குரிய விடயம் Reviewed by Vanni Express News on 10/01/2018 11:35:00 PM Rating: 5