மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிசின் இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காபந்து அல்லது இடைக்கால அரசாங்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதானால், அற்கான பொறுப்பை ஒன்றிணைந்த எதிரணி மஹிந்த ராஜப்ஷவிடம் கையளித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 10/10/2018 12:02:00 PM Rating: 5