நாமலுக்கு எதிரான வழக்கில் சாட்சியிடம் இன்று குறுக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதான சாட்சியாளரான ரொஹான் அபய ஈரியகொல்லவிடம் இன்று குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (09) விசாரணைக்கு வந்தது. 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என்று வழக்கின் பிரதான சாட்சியாளரான ரொஹான் அபய ஈரியகொல்ல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

குறுக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் வழக்கை எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமலுக்கு எதிரான வழக்கில் சாட்சியிடம் இன்று குறுக்கு விசாரணை நாமலுக்கு எதிரான வழக்கில் சாட்சியிடம் இன்று குறுக்கு விசாரணை Reviewed by Vanni Express News on 10/09/2018 03:41:00 PM Rating: 5